கோப்பா டெல் ரேய் அரையிறுதிக்கு முன்னேறியது ரியால் மட்ரிட்

லேகானெஸ், பிப்.6-

ரியால் மாட்ரிட் கோப்பா டெல் ரேய் கிண்ண அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று அதிகாலை காலிறுதி ஆட்டத்தில் அது லேகானெஸ்சை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. ரியாலுக்கான கோல்களை லுக்கா மோட்ரிச், எண்ரிக், கொன்சாலோ கார்சியா ஆகியோர் போட்டனர். ஹுவான் குருஸ், லேகானெஸ்சுக்கான இரு கோல்களைப் புகுத்தினார். 

அவ்வாட்டத்தில் கிலியன் ம்பாப்பேவும் ஜூட் பெல்லிங்ஹாமும் அவ்வாட்டத்தில் ரியால் சார்பில் களமிறங்கவில்லை. அவ்விருவருக்கும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதே அதற்குக் காரணம். 

மூத்த ஆட்டக்காரர்கள் இன்றி கொன்சாலோ போன்ற இளம் விளையாட்டாளர்கள் மிக சிறப்பாக விளையாடினர். அனுபவம் குறைவாக இருந்தாலும், அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பயிற்றுனர் கார்லோ அன்சலோட்டி தெரிவித்தார். 

WATCH OUR LATEST NEWS