வெளிவந்தது ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் அண்மைய தகவல்…

கடந்த 2020ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் ’மூக்குத்தி அம்மன்’. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரித்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியால் இதன் 2 – ம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.  

கடவுள் மேல் இருக்கும் மக்களின் நம்பிக்கையை வைத்து நாட்டில் நடக்கும் முக்கிய விஷயம் குறித்து இப்படம் பேசியிருக்கும். இந்த 2ம் பாகத்திலும் நடிகை நயன்தாரா தான் நடிக்கிறாராம், ஆனால் இந்த முறை சுந்தர்.சி இயக்குகிறார்.  

இந்நிலையில், ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டிலேயே தொடங்க உள்ளதாம். இப்படம் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

WATCH OUR LATEST NEWS