மணிலா, பிப்.6-
அமெரிக்க இராணுவ ஒப்பந்த விமானமொன்று தென் பிலிப்பைன்ஸில் ஒரு நெல் வயலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து நான்கு பேரும் பலியாகியுள்ளதாக அமெரிக்க தூதரகம் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Maguindanao del Sur மாகாணத்தில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதை பிலிப்பைன்ஸின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. பிற விவரங்களு உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.
தெற்கு மாகாணத்தில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க இராணுவத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டது என அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கனிஷ்க கங்கோபாத்யாய் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார். விமான விபத்து குறித்து அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை அறிக்கை வெளியிடும் என்று அவர் கூறினார்.
இடிபாடுகளில் இருந்து வெளிநாட்டினர் எனத் தோன்றிய நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மகுயிண்டனாவோ டெல் சுரின் பாதுகாப்பு அதிகாரி அமீர் ஜெஹாத் டிம் அம்போலோடோ தெரிவித்தார்.