கோலாலம்பூர், பிப்.6-
இவ்வாண்டு ஜுலை மாதம் உயர்த்தப்படவிருக்கும் மின்சாரக் கட்டணத்தில் மக்களின் நலன் முழுமையாக கருத்தில் கொள்ளப்படும் என்று துணைப்பிரதமரும் எரிசக்தி மற்றும் நீர் உருமாற்று அமைச்சருமான டத்தோ ஶ்ரீ படிலா யூசோப் தெரிவித்தார்.
முறைப்படுத்தப்பட்ட நான்காவது IBR திட்ட ஊக்கத்தொகை அடிப்படையிலான வியூகத்தின் கீழ் புதிய கட்டண அட்டவணை உட்பட தீபகற்ப மலேசியாவில் மின்சாரக் கட்டணங்களை நிர்ணப்பதில் மக்கள் நலன், முழுமையாக கருத்தில் கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
மின்சாரக் கட்டண உயர்வில் சாமானிய மக்களுக்கு சுமையை ஏற்படுத்தக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொண்டுள்ள நோக்கத்திற்கு ஏற்ப மக்களுக்கு சுமையைத் தரவல்லதாக இந்த கட்டண உயர்வு இருக்காது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது படிலா யூசோப் இந்த உத்தரவாதத்தை வழங்கினார்.