பத்து மலை, பிப்.6-
டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தலைமையிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அழைப்பை ஏற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை ஜனவரி 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பத்துமலைத்திருத்தலத்திற்கு சிறப்பு வருகை மேற்கொள்ளவிருக்கிறார்.
பிரதமரின் நினைவுகூரத்தக்க இந்த வருகையையொட்டி அவருக்கு தேவஸ்தானம் முழு மரியாதையும், கெளரவிப்பையும் வழங்கவிருப்பதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.