ஜார்ஜ்டவுன், பிப்.6-
கடந்த புதன்கிழமை ஜார்ஜ்டவுன், Persiaran Gurney-யில் உள்ள ஒரு பேரங்காடியின் 7 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து கடும் காயங்களுக்கு ஆளாகிய அமெரிக்க சுற்றுப்பயணி ஒருவர், காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக விரக்திக்கு ஆளாகியுள்ளார் என்பது விசாரணையில் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த அமெரிக்க ஆடவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசியதில் இவ்விவரம் தெரியவந்துள்ளது என்று தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரஹ்மான் முகமட் தெரிவித்தார்.
மலேசியாவை சுற்றிப்பார்ப்பதற்கு கடந்த பிப்ரவரி முதல் தேதி தனது குடும்பத்தினருடன் வந்த அந்த ஆடவர், பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு திரும்புவதாக இருந்தது.
இந்நிலையில் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அந்த வெளிநாட்டு ஆடவர் , அன்றைய தினம் திடீரென்று உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தப் பேரங்காடியின் கீழ் தளத்தில் அமைக்கப்பட்ட அலங்கார வடிவமைப்பில் விழுந்ததால் அவர் காயங்களுடன் உயிர் தப்பிக்க முடிந்தது.