ஜோகூர் பாரு, பிப்.6-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி தடம் புரண்டு, தீப் பிடித்துக் கொண்டதில் அதன் ஓட்டுநர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் ஜோகூர்பாரு, தாமான் ரிந்திங்கில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு, மூன்று தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்படுவதற்கு முன்னதாக EMRS மற்றும் மோட்டார் சைக்கிள் முதல் உதவி சிகிச்சை பிரிவினர் முதலில் அனுப்பப்பட்டதாக லார்கின் தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி ஷாரோல் சுபோ தெரிவித்தார்.
வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் அந்த கார் ஓட்டுநர், வாகனத்திலிருந்து வெளியேறி உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார். தீ சுமார் 30 நிமிடத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.