ஜோகூர் பாரு, பிப்.6-
கிழக்குகரையில் இரண்டு மாநிலங்களின் வெட்டு மர நடவடிக்கைகளுக்காக கையூட்டுப் பெற்றதாக சந்தேகிக்கப்படும் மூன்று அரசாங்க அதிகாரிகள் உட்பட ஐவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் பெண் ஆவார். 30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐவரும் இன்று காலையில் ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கான அனுமதியை SPRM பெற்றுள்ளது.
மூன்று அரசாங்க அதிகாரிகளும் 10 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.