துப்பாக்கிச் சூட்டு சம்பவம், மேலும் ஓர் இந்தோனேசியர் உயிரிழந்தார்

பெட்டாலிங் ஜெயா, பிப்.6-

கடந்த ஜனவரி 24 ஆம் தேதி, சிலாங்கூர் தஞ்சோங் ரூ கடற்பகுதியில் கடல் சார் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் மேலும் ஓர் இந்தோனேசியர் உயிரிழந்துள்ளார்.

காயம் அடைந்த நான்கு இந்தோனேசியர்களில் உயிரிழந்த நபரும் அடங்குவார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அந்த இந்தோனேசியர், நேற்று செர்டாங் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த வேளையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மலேசியா விரிவான விசாரணை செய்ய வேண்டும் என்று இந்தேனேசியா கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் மற்றொரு நபர் உயிரிழந்தது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS