கோலாலம்பூர், பிப். 6-
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சீனப்புத்தாண்டு அன்று காலை 6.20 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஒரு கேளிக்கை மையத்தின் முன்புறம், வாகனத்தை மிக அபாயகரமான செலுத்தி, இதர வாகனங்களை மோதி அராஜகம் புரிந்தது மற்றும் தங்கள் வசம் கத்தி வைத்திருந்தது தொடர்பில் மூன்று இந்திய இளைஞர்கள் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
27 வயது R. தீபன் ராஜ், 19 வயது S. ஜீவன், 18 வயது இளைஞர் ஒருவர் ஆகிய மூன்று நபர்கள், மாஜிஸ்திரேட் அமீரா அப்துல் அசிஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த மூவரும் அவ்விடத்தில் புரிந்ததாக நம்பப்படும் அராஜக செயல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
தீபன்ராஜ், தனக்கு எதிராக குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 1,200 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. ஜீவனும், வயது குறைந்த மற்றொரு இளைஞரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.