ஜார்ஜ்டவுன், பிப்.6-
வரும் செவ்வாய்க்கிழமை பினாங்கில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவில் சாலைபோக்குவரத்து சுமூகமாக நடைபெறும் வேளையில் பாதுகாப்பு கண்காணிப்புக்கு சுமார் 1,405 போலீஸ்காரர்கள் கடமையில் அமர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூச விழாவையொட்டி இரத ஊர்வலம் உட்பட இந்துக்களின் இந்த வருடாந்திர விழா சமூமூகமாக நடைபெறுவதற்கு 22 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.
இந்த தைப்பூச விழாவை காண்பதற்கு பொதுமக்களுடன் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.