பேராவில் தைப்பூச ரத ஊர்வலப் பாதைகளில் மதுபானம் விற்க தடை விதிக்கப்படும்

ஈப்போ, பிப். 6-

இவ்வாண்டு தைப்பூச விழாவில் பேரா மாநிலத்தில் இரதம் ஊர்வலமாக வருகின்ற பகுதிகளில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

தைப்பூச விழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு குறிப்பாக இரதம் ஊர்வலம் நடைபெறுகின்ற பகுதிகளில் உள்ள கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவது அசௌகரியத்தை ஏற்படுத்துதுவதாக புகார் கிடைத்திருப்பதையொட்டி இந்த தடை விதிக்கப்படுவதாக சிவநேசன் குறிப்பிட்டார்.

இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்கின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

WATCH OUR LATEST NEWS