பெந்தோங்கில் ஹெலிகாப்படர் விபத்து, இறந்தவர் இந்தோனேசிய பொறியிலாளர்

பெந்தோங், பிப்.6-

பகாங், பெந்தோங்கில் நிகழ்ந்த ஹெலிகாப்படர் விபத்தில் உயிரிழந்தவர் இந்தோனேசிய பொறியிலாளர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது. இன்று காலை 10.26 மணியளவில் எரிபொருள் நிரப்ப BELL 206L4 ரகத்திலான அந்த ஹெலிகாப்படர் தரையிறங்கிய போது தீப்பிடித்துக்கொண்டது.

இறந்தவர் 27 வயது Finsen Resky Sembirin என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைய்ஹாம் முகமட் கஹார் தெரிவித்தார்.

அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது ஒரு மீட்டர் உயரத்தில் வட்டமிட்டாறு கட்டுப்பாட்டை இழந்தது. இதில் 44 வயது விமானியான ஓர் இந்தோனேசியர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார்.

அந்த ஹெலிகாப்படர் கடந்த ஆறு நாட்களாக Tenaga Nasinal Berhad பணிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS