கோலாலம்பூர், பிப்.7-
மாமன்னர் சுல்தான் இப்ரஹிம், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு புறப்பட்டுள்ளார். மாமன்னருடன் Seri Paduka Baginda, Tunku Panglima Johor, Tunku Abdul Rahman Al- Haj Ibni Sultan Ibrahim மற்றும் Tunku Putera Johor, Tungku Abu Bakar Al- Haj Ibni Sultan Ibrahim ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.
மாமன்னர் வெளிநாட்டிற்கு செல்வது குறித்து ஆட்சியாளர் மன்றத்திடமும், கூட்டரசு அரசாங்கத்திடமும் தெரியப்படுத்தப்பட்டு விட்டதாக இஸ்தானா நெகாரா இன்று ஓர் அறிக்கையின் வாயிலாக சுல்தான் இப்ராஹிமின் முகநூலில் தெரிவித்துள்ளது.
மாமன்னர் விரைவில் குணமடைந்து, நல்ல உடல் ஆரோக்கியத்துன் நீண்ட ஆயுளை பெற நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்யுமாறு அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.