பிரதமருக்கு மக்கள் மகத்தான வரவேற்பை நல்குவர்

கோலாலம்பூர், பிப்.7-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 3 மணிக்கு பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை மேற்கொள்கிறார். பிரதமருக்கு இந்திய மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மகத்தான வரவேற்பை நல்குவர் என்று தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி பத்துமலைத் திருத்தலத்தில் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவின் ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்கு பிரதமரின் இந்த வரலாற்றுப்பூர்வமான வருகை அமையவிருக்கிறது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

பத்துமலைக்கு வருகை புரியும் தமது விருப்பத்தை பிரதமர் தெரிவித்துள்ளதாக இந்திய சமூக விவகாரங்களுக்கு பொறுப்பானவரான டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

பத்துமலையில் நடந்துள்ள, நடக்கவிருக்கும் மேம்பாடுகளை நேரில் காணும் அதேவேளையில் இந்திய பெருமக்களையும் பிரதமர் சந்திப்பார் என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS