தூதர் பணிக்கான ஒப்பந்த காலம் முடிவுற்றது

பெட்டாலிங் ஜெயா, பிப்.7-

அமெரிக்காவிற்கான மலேசியத் தூதர் என்ற முறையில் தமது பணி ஒப்பந்தக் காலம் முடிவுற்றதால், இம்மாதத்தில் தாயகம் திரும்பவிருப்பதாக மூத்த அரசியல்வாதியும், அமெரிக்காவில் மலேசியத் தூதரகவும் நியமிக்கப்பட்ட டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

தாயகம் திரும்பும்படி தாம் கேட்டுக்கொள்ளப்படவில்லை. மாறாக , பணி ஒப்பந்தம் காலம் முடிவுற்றது என்று முன்னாள் அமைச்சரும், அம்னோவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினரும், பேரா, பாடாங் ரெங்காஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தூதராக பொறுப்பேற்பதற்கு இரண்டு ஆண்டு கால ஒப்பந்ததின் அடிப்படையில் வாஷிங்டனுக்கு சென்றேன். அந்த பணி ஒப்பந்த காலம், நாளை பிப்ரவரி 8 ஆம் தேதியுடன் முடிவடைவதால் இம்மாதத்தில் தாய் மண்ணுக்கு திரும்புவேன் என்று நஸ்ரி குறிப்பிட்டார்.

தமக்கு வழங்கப்பட்ட விசா, A 2 அந்தஸ்துக்குரியதாகும். வழக்கமாக வழங்கப்படும் 10 ஆண்டு விசா அல்ல என்று அரசியல் நியமனத்தின் பேரில் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்ட சர்சைக்குரிய அரசியல்வாதியுமான நஸ்ரி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS