நீலாய், பிப்.7-
நெகிரி செம்பிலான், நீலாய், தாமான் நீலாயில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் தீ காயங்களுக்கு ஆளாகினர்.
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உள்ளூர் தொழிலாளர் ஒருவரும், இந்தோனேசியத் தொழிலாளர் ஒருவரும் பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
செம்பனை எண்ணெயைத் தயாரிக்கும் அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர், SKYLIFT பாரந்தூக்கி தீயணைப்பு இயந்திரத்தை பயன்படுத்தியதாக நெகிரி செம்பலான் தீயணைப்பு ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தது.