புத்ராஜெயா, பிப்.7-
பகாங், பெந்தோங்கில் தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் மின்நிலையம் அமைக்கும் திட்டத்தின் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டாவது ஹெலிகாப்டர் சேவை முடக்கப்பட்டதால் ECRL எனப்படும் கிழக்குக் கரையோர ரயில் திட்ட நிர்மாணிப்புப் பணிகளில் பாதிப்பு ஏற்படாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஹெலிகாப்படர் சேவையின் பயன்பாடு, இடை நீக்கம் செய்யப்பட்டது ஒரு தற்காலிக நடவடிக்கையே என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
TNB-யின் மின் நிலைய கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பகாங், பெந்தோங்கில் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஹெலிகாப்டர் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.