தைப்பூச விழாவையொட்டி பத்துமலைக்கு இலவச பேருந்து

கோலாலம்பூர், பிப்.7-

பத்துமலை தைப்பூச விழாவையொட்டி Rapid KL பொது போக்குவரத்து நிறுவனம் இலவச பேருந்து சேவையை வழங்கவிருக்கிறது.

Rapid KL நிறுவனத்தின் இந்த இலவச பேருந்து சேவை பிப்ரவரி 10 திங்கட்கிழமையும், பிப்ரவரி 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் வழங்கப்படும் என்று அந்த பிரதான போக்குவரத்து நிறுவனம் தனது முகநூலின் வாயிலாக அறிவித்துள்ளது.

பத்துமலையை நோக்கி மூன்று பிரதான வழித்தடங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து சேவை மேற்கொள்ளப்படும். கோலாலம்பூர், Hab Bandar Pasar Seni, Batu Caves, LRT Gombak – Batu Caves மற்றும் MRT Kampung Batu – Batu Caves ஆகியவையே அந்த மூன்று வழித்தடங்களாகும் என்று Rapid KL தெரிவித்துள்ளது.

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டும் பத்துமலைக்கு இலவச ரயில் சேவையை வழங்குவதாக இதற்கு முன்பு அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS