பத்துமலை, பிப்.7-
பத்துமலை தைப்பூச விழாவையொட்டி மலேசிய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க குருக்குல இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு 28ஆம் ஆண்டு தைப்பூச அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
இந்த அன்னதான நிகழ்வு வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி காலை மணி 10:00 தொடங்கி பிப்ரவரி 11 ஆம் தேதி இரவு மணி 10:00 வரை, பத்துமலை ஆற்றங்கரை ஓரத்தில் நடக்கவிருக்கிறது.