சிங்கப்பூர், பிப்.7-
சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்த சிங்கப்பூர் சிறைத் துறை, ஈஸ்வரன் வீட்டுக் காவல் திட்டத்திற்குத் தகுதியுடையவர் ஆகிறார். அவர் மீண்டும் குற்றம் புரியும் சாத்தியம் குறைவு. மேலும், அவர் சிறையில் இருந்த காலத்தில் எந்தக் குற்றமும் புரியவில்லை என்பதுடன் அவருக்கு வலுவான குடும்ப ஆதரவு உள்ளது. இதன் அடிப்படையில் அவர் வீட்டுக் காவல் திட்டத்திற்குத் தகுதியுடையவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என சிறைத் துறைப் பேச்சாளர் விளக்கினார்.
ஈஸ்வரன் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி, ஊழல் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகள், நீதித் துறை தனது கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது என்ற மற்றொரு குற்றச்சாட்டு என ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.