கோலாலம்பூர், பிப்.7-
சர்சைக்குரிய சமயப் போதகர் சாகீர் நாயிக்கை கேள்வி எழுப்பியது மூலம் இஸ்லாமிய விவகாரத்தில் தலையிடுவதற்கு தாம் நோக்கம் கொண்டது கிடையாது என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு எம்.பி. என்ற முறையில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விவகாரத்தை பேசுவதும், அது குறித்து கேள்வி எழுப்புவதும், வாதிடுவதும் தமது கடமையாகும் என்று ராயர் குறிப்பிட்டார்.
சாகீர் நாயிம், நாட்டில் குறிப்பாக பெர்லிஸ் மாநிலத்தில் சொற்பொழிவு ஆற்றினாரா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் தாம் கேள்வி எழுப்பியது மூலம் அந்த மாநிலத்தின் சமய விவகாரத்தில் தாம் தலையிட்டதாக பொருள்படாது. மாறாக, பல்வேறு சமயத்தவர்களிடையே பிளவுகளையும் பேதங்களையும் ஏற்படுத்தக்கூடியவர் என்று சந்தேகிக்கப்படும் யாராக இருந்தாலும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் பற்றி கேள்வி எழுப்புவது எம்.பி. என்ற முறையில் தமது கடமையாகும் என்று ராயர் விளக்கம் அளித்தார்.