பத்துமலை, பிப்.7-
நாட்டிலுள்ள இந்துக்களுக்கு தனது தைப்பூசத் திருநாள் வாழ்த்தினை இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ பதிவு செய்தார். தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் என்பது நமது நாட்டுக்கே உண்டான தனித்துவம் ஆகும்.
இரு வாரங்களூக்கு முன்பே பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். இன்று வெள்ளிக்கிழமை நான், பத்துமலை சென்றிருந்த போதும் கூட பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை பொறுமையாகவும், பக்தியுடனும் செலுத்துவதைக் கண்டேன்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் பத்துமலைக்கு இன்று மேற்கொண்ட வருகை, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த மடானி அரசாங்கத்தின் வழி தாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் புலப்படுத்துகிறது.
இந்த வருகையின் போது, அன்வார் இப்ராஹிம் ,கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, தேவஸ்தான முக்கிய உறுப்பினர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களோடு கலந்துரையாடினார்.
தேவஸ்தான பொறுப்பாளர்கள் முன் வைத்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு, சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து உதவும் என பிரதமர் உத்தரவாதம் அளித்தார். ஆலயம் சமூக சேவை மையமாகச் செயல்பட புதிய மண்டபம் கட்டுவதற்கு வசதிகள் செய்து தரப்படும் எனவும் பிரதமர் கூறியதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.