தைப்பூசத்தையொட்டி 20 க்கும் மேற்பட்ட சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும்

கோலாலம்பூர், பிப்.7-

வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் பத்துமலை தைப்பூச விழாவையொட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை பத்துமலையை நோக்கி புறப்படவிருக்கும் இரத ஊர்வலத்திற்கு வழிவிடும் வகையில் கோலாலம்பூர் மாநகரில் 20 க்கும் மேற்பட்ட சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா அறிவித்துள்ளார்.

பிப்ரவரி 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் கோலாலம்பூர், Jalan Tun H.s. Lee-யில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலிருந்து சிலாங்கூர், பத்துமலைக்கு புறப்படும்.

இதனையொட்டி அன்றிரவு Jalan Tun H.S. Lee, Jalan Sultan, Jalan Tun Tan Cheng Lock, Jalan Pudu, Jalan Tun Perak, Jalan Lebuh Ampang, Jalan Munshi Abdullah , Jalan Raja Laut, Jalan Sultan Azlan Shah, Jalan Tun Perak உட்பட 20 க்கும் மேற்பட்ட சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS