புத்ராஜெயா, பிப்.8-
பெல்ஜியம் தலைநகர் Brussels-ஸில் கடந்த 72 மணி நேரத்தில் சில இடங்களில் தொடர்ச்சியாக நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதர மூவர் காயம் அடைந்துள்ளனர். எனினும் இதில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஸ்மா புத்ரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனினும் பெல்ஜியம் தலைநகரில் நடப்பு சூழ்நிலை, அங்குள்ள மலேசியத் தூதரகம் மூலம் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.