ஜோகூர்பாரு, பிப்.8-
ஜோகூர்பாரு, ஜாலான் கெம்பாஸ் பாருவில் உள்ள சமிக்ஞை விளக்குப்பகுதியில் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணியளவில் நிகழ்ந்ததாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் தெரிவித்தார்.
இந்த விபத்து, 33 வயது உள்ளூர் ஆடவர் செலுத்திய Ford Ranger 2.0 ரக வாகனம் மூலம் ஏற்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பல்வீர் சிங் குறிப்பிட்டார்.
பாசீர் கூடாங்கில் இருந்து Setia Tropika-வை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த Ford Ranger 2.0 ரக வாகனம், 21 வயது ஆடவர் செலுத்திய Perodua Axia ரக காரில் மோதியது. இந்த விபத்தினால் சாலையை விட்டு விலகிய Ford Ranger 2.0 ரக வாகனம், எதிரே வந்த மேலும் சில வாகனங்களை மோதியதாக தெரியவந்துள்ளது.
இதில் மூவர் காயமுற்றனர். அனைவரும் சுல்தானா அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பல்வீர் சிங் குறிப்பிட்டார்.