போலீஸ்காரர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? விசாரணை நடத்தப்படுகிறது

கோலாலம்பூர், பிப்.8-

கோலாலம்பூரில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற பேரணி தொடர்பில் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் புகார் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா தெரிவித்துள்ளார்.

போலீஸ்காரர் நடந்து கொண்ட முறையில் அதிருப்தியுற்ற அந்தப் பெண், போலீஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார். தற்போது இதன் மீதான விசாரணை நடைபெற்று வருவதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

அந்த பேரணி தொடர்பில் 2012 ஆம் ஆண்டு பொது அமைதி சட்டத்தின் கீழ் போலீசாரின் விசாரணை நடைபெற்று வரும் வேளையில் அந்தப் பெண் வாக்குமூலம் அளிப்பதற்கு போலீசாரால் அ ழைக்கப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணைத் தவிர மேலும் எட்டு பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பாலியல் தொல்லைத் தொடர்பில் பொது மக்கள் ஆருடம் எதனையும் கூற வேண்டாம். இது விசாரணையைப் பாதிக்கும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS