சுங்கைபட்டாணி தைப்பூச விழாவில் ஒலி பெருக்கியுடன் வரும் லோரிகளுக்குத் தடை

சுங்கை பட்டாணி, பிப்.8-

சுங்கைபட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச விழாவையொட்டி, தங்கள் காணிக்கையை செலுத்துவதற்கு இரத காவடிகளை இழுத்து வரும் பக்தர்கள்,தங்களது இரதக் காவடிகளுக்கு பின்னால் ஒலி பெருக்கிகளை சுமந்து வரும் லாரிகளுக்கு ஆலய வளாகத்தில் நுழைவதற்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

நேற்று முன் தினம் கோலமூடா மாவட்ட காவல் துறையில் நடைபெற்ற சந்திப்பிற்கு பிறகும்,மாலையில் இந்து பணிப்படையினருடன் ஆலயத்தில் நடத்தப்பட்ட சந்திப்பிலும் தேவஸ்தானம் தீர்க்கமாக இந்த முடிவினை எடுத்துள்ளதாக தேவஸ்தானத் தலைவர் பெ. இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி முகமூடிகளை அணிந்து வருவது ,விசில் சத்தத்தை எழுப்புவது,பட்டாசுகள் வெடிப்பது போன்ற சம்பவங்களை அவசியம் தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்துயுள்ளது.

தவிர தைப்பூச விழாவில் வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் நகராண்மைக்கழகம் வரையறுத்துள்ள பொருட்களை மட்டுமே வியாபாரம் செய்ய முடியும்.அனுமதி இல்லாமல் விற்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.


மேற்குறிப்பிட்ட தவறுகளைப் புரிந்தவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்தால் அதற்கு தேவஸ்தானம் நிர்வாகம் பொறுப்பேற்காது என தேவஸ்தானத் தலைவர் பெ.இராஜேந்திரன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS