ஜோகூர்பாரு, பிப்.8-
ஜோகூர்பாரு, கெம்பாஸ், பிபிஆர் அடுக்குமாடி பொது குடியிருப்புப் பகுதியில் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து 20 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகலில் நிகழ்ந்தது. அந்தப் பெண்ணை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தற்போது தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.