இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து மானியம் வழங்கும்

கோலாலம்பூர், பிப்.8-

கடந்த ஆண்டு இலக்கவியல் அமைச்சு, இந்தியர்களின் மேம்பாட்டுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. ஆலய மேம்பாட்டுப் பணிகள், இந்திய அரசு சார்பற்ற இயக்கங்களுக்கு நிதி உதவி, தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி என கடந்த ஆண்டு வழங்கியது.

அது போலவே இந்த ஆண்டும் இந்தியர்கள் நலன் சார்ந்த அமைப்புகளுக்கு இலக்கவியல் அமைச்சு கணிசமான தொகை வழங்கும் என்று அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை புரிந்த போது இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங்கும் கலந்து கொண்டார்.

பத்துமலை வருகைக்கு பின்னர் வெளியிட்ட அறிக்கையில் இந்திய அமைப்புகளுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்த ஆண்டும் நிதி வழங்கப்படும் என்றார்.

தவிர அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவையொட்டி பத்துமலையில் பக்தர்களுக்கு இலக்கவியல் அமைச்சு அன்னதானமும் குடிநீரும் வழங்கும் என்பதையும் கோபிந்த் சிங் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS