கோலாலம்பூர், பிப்.8-
இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்தியர்களின் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட 14 நாட்களிலேயே இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 143 தொழில் முனைவர்களுக்கு மொத்தம் 3.6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அறிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தெக்குன் திட்டத்தில் இந்திய தொழில் முனைவர்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களான SPUMI ( ஸ்பூமி ) மற்றும் SPUMI Goes Big ஆகியவற்றின் வாயிலாக மேற்கண்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
3.6 மில்லியன் தொகை, 143 இந்திய தொழில் முனைவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று SPUMI ( ஸ்பூமி ) மற்றும் SPUMI Goes Big திட்டத்தை மேற்பார்வையிடும் கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ ரமணன் இதனை தெரிவித்தார்.