ஜோகூர்பாரு, பிப்.8-
ஜோகூர்பாரு, கெம்பாசில் உள்ள பிபிஆர் பொது அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் 27 வயது பெண், கீழே விழுந்து மரணம் அடைந்தது தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக ஜோகூர்பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 11.20 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். அந்தப் பெண்ணின் உடல் , அடுக்குமாடி வீட்டின் கீழ் தளத்தில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் இடத்தில் கிடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட பெண், ஜோகூர், பெர்மாய் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக பல்வீர் சிங் தெரிவித்தார்.