ஜார்ஜ்டவுன், பிப்.8-
ஜார்ஜ்டவுன், கம்போங் சுங்கை பத்துவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர், பேருந்தில் மோதி உயிரிழந்தார்.
காலை 6.18 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 68 வயதுடைய அந்த முதியவர், சம்பவ நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாக ஸ்ரீ பாலிக் பூலாவ் தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்கத் தலைவர் வான் முகமட் பைசால் வான் முகட் சீன் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளுடன் பேருந்து அடியில் சிக்கிக் கொண்ட அந்த முதியவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர், பிரத்தியேகச் சாதனங்களைப் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.