நிபோங் திபால், பிப்.8-
ஆசிரியர்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கல்வி அமைச்சு ஒரு போதும் பள்ளி வளாகங்களில் அனுமதித்தது கிடையாது என்று அதன் அமைச்சர் பட்லீனா சீடேக் தெரிவித்தார்.
எனினும் அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கல்வி அமைச்சு ஆராயும் என்று அவர் விளக்கினார். ஒரு வேளை கடன் கொடுக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களைச் சந்திப்பதற்கு பள்ளி வளாகங்களில் நுழைந்து இருப்பார்களேயானார் அது கல்வி அமைச்சின் அனுமதியின் பேரில் நடத்து இருக்காது. மாறாக, தனிநபர்கள் இதற்கு அனுமதி தந்து இருக்கக்கூடும் என்று அவர் விளக்கினார்
ஆசிரியர்களுக்கு கடன் கொடுப்பது தொடர்பில் நிதி ஆலோாசனை நிறுவனங்கள், பள்ளிகளில் ஆசிரியர்களுடன் விளக்கக் கூட்டங்களை நடத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதில் அளிக்கையில் பட்லீனா சீடேக் இதனைத் தெரிவித்தார்.