சுங்கை பூலோ, பிப்.8-
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவை அகற்ற வேண்டும் என்று இதற்கு முன்பு போராடிய எம்.பி.க்கள், சுங்கைப் பூலோ சிறைச்சாலையின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 32 சொஸ்மா கைதிகளின் குடும்பங்களை நேரில் வந்து சந்திக்குமாறு SUARAM கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த கொடுங்கோல் சட்டத்தை அரசாங்கம் இன்னமும் அகற்றாமலும், அதில் திருத்தம் செய்யாமலும் இருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்று SUARAMமுன் நிர்வாக இயக்குநர் ஸ்டீவன் துரைசாமி தெரிவித்தார்.
சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு வெளியே இன்று காலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கிய மக்களை நேரில் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டீவன் துரைசாமி இதனைக் குறிப்பிட்டார்.