வறுமை கல்விக்குத் தடையாக இருக்கக்கூடாது

கோலாலம்பூர், பிப்.9-

வறுமை என்பது கல்வி கற்பதற்கு தடையாக இருக்கக்கூடாது. அரசு சாரா நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தேவைப்படுபவர்களுக்கு உதவ முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். தரமான கல்விக்கான அணுகல் அனைவருக்குமான உரிமை. குறிப்பாக பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாட்டை வழிநடத்தக்கூடிய அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் கல்வி முக்கியம் எனக் குறிப்பிட்டார் தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜோஹாரி அப்துல் கானி.

கல்வி என்பது சிறந்த எதிர்காலத்திற்கான திறவுகோல். சமூக அல்லது பொருளாதாரப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு மாணவருக்கும் வெற்றி பெற சமமான வாய்ப்பு உள்ளது. போதுமான கல்வி இல்லாதது நாட்டின் எதிர்காலத்தையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் எதிர்மறையாகப் பாதிக்கும். இதனைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். குறிப்பாக B40 பிரிவில் உள்ள பெற்றோர்கள் கஷ்டப்பட்டாலும் கல்வியை முதன்மைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS