பத்துகேவ்ஸில் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் போதைப்பொருள் கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், பிப்.10-

பத்து கேவ்ஸ் வட்டாரத்தில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 11.43 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் கெதாமின் மற்றும் ஷாபு வகையைச் சேர்ந்த போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கிடங்கின் பாதுகாவலர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத் தொழிப்பு இயக்குநர் டத்தோ ஶ்ரீ கௌ கொக் சின் தெரிவித்தார்.

போலீசாரின் கண்களை மறைப்பதற்கு போதைப்பொருள் அனைத்தும் சீன தேயிலை பாக்கெட்டுகளில் பொட்டலமாக கட்டப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS