துப்பாக்கிகளை வைத்திருந்ததாக தைவான் ஆடவர்கள் இருவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், பிப்.10-

தங்கள் வசம் துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் வைத்திருந்ததாக தைவான் நாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்கள், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

26 மற்றும் 33 வயதுடைய அந்த இரு தைவான் ஆடவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

14 துப்பாக்கிகள், 900 தோட்டாக்ளை வைத்திருந்தது மற்றும் அவற்றை விற்பனை செய்தது தொடர்பில் அவ்விருவரும், நீதிபதி சித்தி ஷாகீரா மோதாருடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் கோலாலம்பூர், செந்தூல், டேசா பார்க் சிட்டியில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS