ஜார்ஜ்டவுன், பிப்.10-
இரு வெளிநாட்டுச்சுற்றுப்பயணிகள் கைகலப்பில் ஈடுபட்டதை போலீசார் உறுதிப்படுத்தினர். எனினும் மேல் நடவடிக்கை எதுவுமின்றி, அந்த இரு சுற்றுப்பயணிகளும் தங்கள் பிரச்னையைச் சமூகமாக தீர்த்துக்கொண்டனர் என்று தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் பினாங்கு, பெர்சியாரான் கர்பால் சிங்கில் நிகழ்ந்தது. இந்த கைகலப்பு தொடர்பில் அதிகாலை 3.45 மணியளவில் 33 வயதுடைய அந்நிய நாட்டுப் பெணி ஒருவர் புகார் செய்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரே நாட்டைச் சேர்ந்த தமக்கும் அந்த ஆடவருக்கும் இடையில் வாக்குவாதம், கைகலப்பாக மாறியதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்து இருந்ததாக அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.