பாசீர் கூடாங், பிப்.10-
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், மின் கம்பத்தில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் பாசீர் பூத்தே, ஜாலான் பாசீர் பூத்தேவில் நிகழ்ந்தது.
கடும் காயங்களுக்கு ஆளான 25 வயதுடைய அந்த மோட்டார் சைக்கிளோட்டி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.
அந்த மோட்டார் சைக்கிளோட்டி, தாமான் பாசீர் பூத்தேவில் இருந்து பண்டார் ஸ்ரீ ஆலமை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.