கோலாலம்பூர், பிப்.10-
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சீனப்புத்தாண்டு அன்று அதிகாலையில் கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஒரு கேளிக்கை மையத்தின் முன், கத்தியைப் பயன்படுத்தி கைலப்பில் ஈடுபட்டதாக மேலும் இரண்டு ஆடவர்கள் இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
சிகை அலங்கரிப்பாளரான 26 வயது அகிலன் குணசேகரன் மற்றும் தொழிற்சாலைப் பணியாளரான 19 வயது அன்புச்செல்வன் கணேசன் ஆகியோர் மாஜிஸ்திரேட் அருண் ஜோதி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 148 ஆவது பிரிவின் கீழ் அகலனும், அன்புச்செல்வனும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து இருவரும் விசாரணை கோரியதால், அவர்களை ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 1,500 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட் அருண்ஜோதி அனுமதித்தார்.