பட்டர்வொர்த், பிப்.10-
தைப்பூச விழாவையொட்டி பினாங்கு முன்னாள் முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு 50 ஆயிரம் ரிங்கிட் நன்கொடையை வழங்கினார்.
தைப்பூசத்தையொட்டி பினாங்கு, பட்டர்வொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு நேற்று வருகைப் புரிந்த லிம் குவான் எங்கை, இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் R.A. லிங்கேஸ்வரன், ஆணையர் குமரன் கிருஷ்ணன் உட்பட ஆலயப் பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட லிம் குவான் எங்கிற்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் நகராண்மைக்கழக உறுப்பினர்களான லிங்கேஸ்வரன் சர்மா, துரை, சங்கர், Petrick மற்றும் பட்டர்வொர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.