சுங்கை பட்டாணி, பிப்.10-
சுங்கை பட்டாணி, ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா களைகட்டியது. 115 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள், பால்குடம், ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்திய வண்ணம் உள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர் மாலையில் மாலையில் 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பால்குட காணிக்கையை பக்தர்கள் செலுத்துவதற்கு தேவஸ்தானம் நேரத்தை வரையறுத்துள்ளது.
எதிர்பார்த்த பக்தர்களின் எண்ணிக்கையை விட அதிகமானோர் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்திய வண்ணம் உள்ளனர்.
மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படும் சுங்கை பட்டாணி தைப்பூச விழாவில் சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேவஸ்தானத் தலைவர் இராஜேந்திரன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.