ஜார்ஜ்டவுன், பிப்.10-
பினாங்கு, தண்ணீர்மலை, கோவில்களில் நாளை கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவையொட்டி அதன் ஏற்பாடுகளை கண்டறிவதற்கு மாநில முதல்வர் Chow Kon Yeoh இன்று மாலையில் நேரடியாக வருகைப் புரிந்தார்.
முதல்வர் Chow Kon Yeoh-வுடன், துணை நிதி அமைச்சரும், தஞ்சோங் எம்.பி,யுமான Lim Hui Ying, Bukit Bendera எம்.பி. Syerleena Abdul Rashid, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு, Wong Hon Wai , Batu Uban சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் ஆகியோர் வருகைப் புரிந்தனர்.
முதலமைச்சரவையும், பிரமுகர்களையும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் R.A. லிங்கேவரன், ஆணையர் குமரன் கிருஷ்ணன் உட்பட ஆலயப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பை நல்கினர்.
மேளதாள நாதஸ்வரம் முழங்க முதலமைச்சர் Chow Kon Yeoh-வும், பிரமுகர்களும் அழைத்து வரப்பட்டனர்.
தைப்பூச ஏற்பாடுகள் குறித்து RSN ராயரும், டாக்டர் லிங்கேஸ்வரனும் முதலமைச்சருக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் முதலமைச்சரும், பிரமுகர்களும் தண்ணீர் மலை கோவிலை நோக்கி செல்லும் பிரதான பாதையில் இரு மருங்குகளிலும் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்களை பார்வையிட்டனர்.
தண்ணீர் பந்தல்களை பார்வையிட்ட முதலமைச்சர் Chow Kon Yeoh- விற்கும் பிரமுகர்களுக்கும் தண்ணீர் பந்தல் பொறுப்பார்கள் மாலை அணிவித்து, பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்தனர்.
தைப்பூசத்தையொட்டி மொத்தம் 169 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ராயர் தெரிவித்தார்.