21 நேர பயணத்திற்குப் பின்னர் பத்துமலைத் திருத்தலத்தை வந்தடைந்தது வெள்ளி இரதம்

பத்துமலை, பிப்.10-

தைப்பூச விழாவையொட்டி, கோலாலம்பூர், Jalan Tun H.S. Lee-யில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட வெள்ளி இரதம், 21 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று மாலை 7.00 மணியளவில் பத்துலை திருத்தலத்தை வந்தடைந்தது.

பத்துமலை தைப்பூச வரலாற்றில், இரதம் நீண்ட நேரம் பயணம் செய்து, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும்.

கோலாலம்பூரிலிருந்து பல்வேறு சாலைகளை கடந்து, வழிநெடுகிலும் பக்தர்களின் அர்ச்சனையை ஏற்று, ஸ்ரீ முருகன் பெருமான், தாம் குடிகொண்டு இருக்கும் பத்துமலைத்திருத்தலத்தை வந்தடைந்த போது, பக்தர்கள், கைவணங்கி, தைப்பூச உற்சவ மூர்த்தியை வரவேற்றனர்.

வெள்ளி இரதம் பத்துமலை திருத்தலம் வந்தடைந்ததும், அருள்மிகு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

WATCH OUR LATEST NEWS