வீடு தீப்பற்றிக் கொண்டது, 90 விழுக்காடு அழிந்தது

கிள்ளான், பிப்.11

கிள்ளான் கம்போங் புக்கிட் காப்பார், ஜாலான் பஹாகியாவில் உள்ள ஒரு வீடு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 90 விழுக்காடு சேதமடைந்தது.

இன்று காலை 10.00 மணியளவில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்த சம்பவத்தில் எந்தவித உயிருடற்சேதமும் ஏற்படவில்லை என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி நடவடிக்கை இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

இந்த தீவிபத்து தொடர்பில் தனது துறைக்கு காலை 10.08 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து 12 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS