பினாங்கு தைப்பூச விழாவில் ஒரு பார்வை

ஜார்ஜ்டவுன், பிப்.11-

இவ்வாண்டு பினாங்கு, தண்ணீர் மலை தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகமான பக்தர்களும், சுற்றுப்பயணிகளும் கலந்து கொண்டு, விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

பினாங்கு தைப்பூச விழா என்றாலே இரத ஊர்வலம், அதிகமான தேங்காய்கள் உடைக்கப்பட்டு, நேர்த்திக் கடனை செலுத்துவது, மிக கட்டுக்கோப்பாக தைப்பூச விழா நடைபெறுவது உட்பட பல்வேறு தனித்துவமான சிறப்பு அம்சங்களை தாங்கியுள்ளது.

இதற்கு மேலாக, பினாங்கு தைப்பூச விழாவில் சிறப்பு சேர்ப்பது தண்ணீர் பந்தல்களாகும். உற்சவ மூர்த்தி முருகப் பெருமானைப் போலேவே அழகிலும், வடிவதிலும் சிறக்க வைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் தண்ணீர் பந்தல்களை போட்டி போட்டுக்கொண்டு பினாங்குவாசிகளுக்கு அலங்கரிப்பதில் அவர்களுக்கு நிகரில்லை என்று பலர் புகழும் அளவிற்கு இம்முறையும் தண்ணீர் பந்தல்கள், தைப்பூச விழாவிற்கு சிறப்பு சேர்த்தன.

இம்முறை கிட்டத்தட்ட 160 தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் பந்தல்களை நிறுவியர்கள், தொண்டு சேவையில் ஈடுபட்டவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தண்ணீர் பந்தல்களை நோக்கி திசைகள் வலம் வந்தது.

தண்ணீர் பந்தல் அமைத்து, பக்தர்களின் தாகத்தை தீர்ப்பது, முருகப்பெருமானுக்கு ஆற்றும் தொண்டுப் பணியாகவே கருதுவதாக பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS