பினாங்கு தைப்பூச விழா ஒற்றுமையின் சின்னமாகும்: பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeoh புகழாரம்

ஜார்ஜ்டவுன், பிப்.11-

பினாங்கு தைப்பூச விழா என்பது ஒற்றுமையின் சின்னமாக மாநில அரசாங்கத்தின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது என்று மாநில முதலமைச்சர் Chow Kon Yeoh புகழாரம் சூட்டினார்.

பினாங்கு மாநில அரசு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் சமூகத்தின் பாரம்பரியமும், கலாச்சார மரபுகளையும் பாதுகாப்பதிலும், அவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதிலும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை Chow Kon Yeoh குறிப்பிட்டார்.

பினாங்கு, தண்ணீர் மலை தைப்பூச விழாவையொட்டி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் Chow Kon Yeoh இதனை தெரிவித்தார்.

பினாங்கு மாநில தைப்பூச விழா, பாரம்பரிய ரீதியாக பிரசித்திப்பெற்றதாகும். நேற்று முதல் முதல் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். கோவில் நிர்வாகத்தின் தகவல்படி சுமார் 15 லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தைப்பூச விழாவையொட்டி பாரம்பரியமும், வரலாற்று சிறப்பையும் தன்னகத்தே கொண்டுள்ள பினாங்கு மாநிலத்திற்கு வருகைப்புரிந்துள்ள அனைவரையும் மாநில அரசாங்கம் சார்பில் தாம் வரவேற்பதில் தாம் மகிச்சி அடைவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு மாநிலம் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான அம்சமான ஒரு அடையாளத்துடன் கூடிய சமூகத்தை உருவாக்க, அதன் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் தோற்றம் குறித்து பெருமை கொள்ளும் சமூக வளர்ச்சியை வலுப்படுத்துவதற்காக, / திட்டமிடப்பட்ட அனைத்து திட்டங்களையும் வழிமுறைகளையும் தொடர பினாங்கு அரசு உறுதிபூண்டு இருப்பதையும் Chow Kon Yeoh குறிப்பிட்டார்.

அந்த வகையில் பினாங்கு இந்துக்களுடன் பின்னிப்பிணைந்த தைப்பூச விழா தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு பினாங்கு அரசு தொடர்ந்து தனது ஆதரவை நல்கி வரும் என்று Chow Kon Yeoh தெரிவித்தார்.

முன்னதாக, சிறப்பு வருகை புரிந்த முதலமைச்சர் Chow Kon Yeow உட்பட வருகை புரிந்த பிரமுகர்கள் அனைவருக்கும், ஆலயத் தலைவர் டத்தோஸ்ரீ கே. குமரேந்திரம் மற்றும் இதர பொறுப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

இந்த சிறப்பு நிகழ்வில் பினாங்கு மாநில முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ, பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஆனந்த் பொன்னுதுரை, துணை நிதி அமைச்சர் Lim Hui Ying, பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர், துணைத் தலைவர் டாக்டர் லிங்கேஸ்வரன் உட்பட பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு தைப்பூச விழாவிற்கு சிறப்பு சேர்ந்தனர்.

WATCH OUR LATEST NEWS