ஜார்ஜ்டவுன், பிப்.11-
ஒற்றுமை அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதி மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ என்று பினாங்க இந்து அறப்பணி வாரியத் தலைவர் RSN ராயர் தெரிவித்தார்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோதான் இந்தியர்களின் பிரதிநிதி. அந்த விஷயத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று ராயர் குறிப்பிட்டார்.
பினாங்கு தைப்பூச விழாவையொட்டி தண்ணீர்மலை, ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தின் வெளிவளாகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow சிறப்பு வருகையொட்டிய நிகழ்வில் உரையாற்றுகையில் ராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பினாங்கு தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறுவதற்கு அமைச்சர் கோபிந்த் சிங் பெரும் பங்காற்றியிருப்பதாக ராயர் தமது உரையில் குறிப்பிட்டார்.
குறிப்பாக, குன்றின் மீது குடிகொண்டு இருக்கும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலின் பூஜை, புனஸ்காரங்களை, பக்தர்கள் கீழ் தலத்திலிருந்து பார்ப்பதற்கு கோவிலுக்கு மின்னியல் திரையை அமைச்சர் கோபிந்த் சிங், இலவசமாக வழங்கியிருப்பதாக ராயர் தமது உரையில் தெரிவித்தார்.