பத்துமலை தைப்பூச விழாவிற்கு பெருமை சேர்த்தது மக்களே

பத்துமலை, பிப்.11-

இன்று கொண்டாடப்பட்ட 2025 ஆம் ஆண்டு தைப்பூச விழா, இந்த அளவிற்கு சிறப்பாக அமைந்து, பெருமை சேர்க்கப்பட்டதற்கு மக்களே காரணமாகும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.

திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான முக்கிய காரணமாகும் என்று டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், வெள்ளிரத ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இன்றிரவு வரையில் பத்துமலையில் பக்தர்கள் தொடர்ந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மில்லியன் கணக்கான மக்கள் இந்த தைப்பூச விழாவில் கலந்துகொண்டுள்ளனர். பக்தர்கள் ஏந்தி வரும் காவடிகளை காண வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்துள்ளனர்.
இதுதான் பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றியாகும் என்று டான்ஸ்ரீ நடராஜா விரித்தார்.

பத்துமலை தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவதற்கு எல்லா நிலைகளிலும் ஒத்துழைப்பு நல்கி பொது மக்களுக்கு தேவஸ்தானம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS